அனைத்து அரச பாடசாலைகளின் மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்காக சுரக்ஸா காப்பீட்டு இன்சூரன்ஸ் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை அதன் நன்மைகளை பெற விண்ணப்பங்களை முன்வைக்க முடியாமற் போனவர்கள் சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய வலய கல்வி பணிமனைக்கு அல்லது கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போசாக்கு கிளையின் சுரக்ஸா மாணவர் காப்பீட்டு நன்மை பெறும் விண்ணப்பதாரிகள் உரிய வலய கல்வி பணிமனை அல்லது கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலதிக விபரங்களை வார நாட்களில் மு . ப 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை 0718355261, 0112784163, 112784872 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.