அமெரிக்கா திடீரென உலக சுகாதார அமைச்சுக்கு நிதி உதவியை நிறுத்தியதாக அறிவித்து அனைவரையும் சிந்திக்க வைத்தது.
அதே தொடரில் இன்னுமொரு முடிவையும் எடுத்துள்ளது.
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா திடீரென வழக்கு பதிவு செய்துள்ளது.
அதற்குரிய காரணத்தை அமெரிக்கா மிசௌரி மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் கூறுகையில் சீனா இந்த வைரஸ் விடயத்தில் உலகிற்கு ஆரம்பத்தில் பொய் சொல்லியது, மேலும் சீனா அரசாங்கம் இந்த வைரஸ் பற்றி கூறிய வைத்தியர்களையும், செய்தியாளர்களையும் காணாமல் ஆக்கியது, மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆரம்பத்தில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் சீனாவின் இந்த பொறுப்பற்ற நிலையால் தான் வைரஸ் இந்த அளவுக்கு உலகளவில் பாதித்துள்ளது. இவை அனைத்துக்கும் சீனாவே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு 20 டிரில்லியன் டாலர்களை சீனா நஷ்ட ஈடு வழங்கக் கோரி வழக்கு பதிவு செய்துள்ளது.