https://www.kuchchaveli.com Home | குச்சவெளி | சிறு கதைத் தொகுப்பு! – தொடர் இல 04

பாடசாலைக் காலம் முடிந்து விட்டதே என்று கதி கலங்கி நின்றாள் மாலா.நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணியவள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தாள்.


மலாவின் பெற்றோர் அறநெறி பாடசாலையில் சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தனர்.


பாடசாலையை விட்டு விழகி ஒரு வாரம் கழிந்ததன் பின் அவளது வீட்டு வாசலில் யாரோ கூப்பிடும் சப்தம் கேட்க ஓடிச்சென்று யாரென பார்த்தாள் மாலா. வீட்டு வாசலில் தபாற்காரன் ஒரு கடிதத்தை காட்டி “சோம சுந்தரம் யாரும்மா? ஆ எங்க அப்பாதான் தாங்க நா குடுத்துக்கிறேன் சரிம்மா” என்று தபாற்காரன் கடிதத்தை கொடுத்துவிட்டு சென்றார்.
அப்பா!அப்பா! இந்தாங்கப்பா உங்களுக்கு லெட்டர் வந்திருக்கப்பா என்று தன் அப்பாவிடம் லெட்டரைக் கொடுத்தாள். கொண்டாம்மா என்னன்னு பாப்போமென்று ஆர்வத்தோடு பிரித்து படிக்களானார் மாலாவின் அப்பா.
கடவுளே! நீ என்ன கை விடல.எல்லா புகலும் உனக்கே உரித்தாகட்டும் என்று வந்த லெட்டரை தன் மார்போடு அணைத்துக் கொண்டு சந்தோஷ வெள்ளத்தில் துள்ளிக் குதித்தார் மாலாவின் அப்பா.
என்னப்பா இவ்வளவு சந்தோஷமா இருக்கிறீங்க?அப்படி என்ன அந்த லெட்டர்ல இருக்கு?குடுங்கப்பா வாசிச்சுப் பாப்போம் என்றாள் மாலா.
அது வந்து உன்ன நேர்முகப் பரீட்சைக்கு கூட்டி வர சொல்லி வந்திருக்குமா. அதாமா ரொம்ப சந்தோஷமா இருக்குமா என்றார். ஹ்ஹு….அவ்வளவு தானா??நா நினச்சே ஏதோ அப்பாக்கு அதிஷ்ட டிக்கட் விழுந்திருக்கென்டு…. சிரித்தாள் மாலா.
ஆமாம்மா இதவிட என்னமா அதிஷ்டம் வேணு நமக்கு?இதுவே பெரிய அதிஷ்டந்தானம்மா என்றார்.
சரி சரி எப்ப வர சொல்லிருக்காங்க? என்றாள் மாலா. இன்டக்கி ஏழுதானம்மா திகதி?ஆமப்பா பத்தாந்திகதி வர சொல்லிருக்காங்கமா என்றார்.
லெட்டரின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு பத்தாம் திகதி காலை பத்து மணிக்கு அறநெறி பாடசாலை நோக்கி அப்பாவும் மகளும் சென்றனர்.
வெளியே சிரித்துக் கொண்டாலும் உள் மனதில் ஏதோ ஒரு வகை கவலை அவளை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருந்தது.
மாலாவுக்கு வழங்கப்பட்ட இலக்கம் ஐந்து.அவளது பெயர் கூப்பிடப் படும் வரை அச்சத்தோடு அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் மாலாவின் பெயர் கூப்பிடப் பட்டது. பதற்றத்தோடு போய் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
“மாலா”நல்ல பெயர் என்றார் நடுவராக அமர்ந்திருந்த ஒருவர் அப்போதே அவளது அச்சம் நீங்கி புன்னகைத்தாள்.
அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த நடுவர் நல்ல கெட்டிக்காரி தானம்மா ஏ தொடர்ந்து படிக்கயில்ல? என்று ஆரம்பித்தார்.
அவளை அறியாமலே கண்ணிலிருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டியது.
ஏமா என்னாச்சு ஏ அழுரீங்க?என்றார்.ஆமா நா நல்ல கெட்டிக்காரிதா எங்க அப்பாக்கு என்ன இங்க படிக்க வைக்கனும்னு ரொம்ப நாள் ஆச அதா அவங்க என்ன ஸ்கூல விட்டு நிப்பாட்டிட்டு இங்க சேர்க்க கூட்டி வந்திருக்காங்க என்றதும் ஏமா அப்போ உனக்கு இங்க படிக்க விருப்பமில்லையாம்மா? அப்பாக்கிட்ட சொல்லவாம்மா என்றார் நடுவர்.
ச்சே அப்படில்லா ஒன்னுமில்ல நா அப்பாவுக்காகவே வாழ்றவ அவங்க என்ன சொன்னாலு நா ஏற்றுக் கொள்வே.அவங்கட ஆசய நிறைவேற்றுவே கண்டிப்பா இது நடக்கு என்றாள் மாலா.
மாலாவின் பதில் கேட்டு அனைவரும் அசந்து போனார்கள். மாலாவை இன்ட்ரவியூ பன்னியவர் மிகவும் சந்தோஷப் பட்டார்.கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலழித்தாள் மாலா.
Ok மா நீங்க போகலாம் மீண்டும் எப்ப இங்க வரனும்னு நாங்க அறிவிப்போ மென்று அவர் கூறினார்.
வெளியில் தயக்கத்தோடு உட்கார்ந்திருந்த அப்பாவைப் பார்த்து வாங்கப்பா போகலாம் என்றாள்.என்னம்மா முடிஞ்சுதா?ஆமாப்பா முடிஞ்சுது. என்னம்மா சொன்னாங்க?என்று பதற்றத்தோடு கேட்டார் மாலாவின் அப்பா.
எல்லா Ok என்றாங்க திருப்ப எப்ப வரனும்னு சொல்வாங்களா…. தொடரும். By.MS

By Admin

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.