சிறுமியை பாலியல் துஷபிரோயோகம் செய்து அதனை வீடியோ படம் பிடித்து சமூக வலயத்தளத்தில் பதிவேற்றம் செய்த நபர் ஒருவரை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
பதிவேற்றம் செய்யப்பட வீடியோ மிக வேகமாக வைரலானதை தொடர்ந்தே மேட்படி கைது இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க பகுதியில் இருக்கும் அடிஅம்பலாம கிராமத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே இந்த குற்றத்தைப் புரிந்துள்ளார். கைதுசெய்யப்பட்டனர் குறித்த சிறுமியின் நெருங்க குடும்ப உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை பல தடவைகள் வீட்டிலும் வெளியிலும் குறித்த நபர் பாலியல் துஷபிரோயோகம் செய்துவந்துள்ளார் எனவும் அவர் ஒரு முச்சக்கரவண்டி ஓட்டுநர் எனவும் தெரிவித்த போலீசார் குற்றவாளியை இன்று நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்