Sir Ahmed Farook

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாம் சிறந்த சமூக சேவையாளர்களை சமூகத்திற்க்கு அடையாளம் காட்டும் முகமாக கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் இன்று நாம் சகோதரர் அஹமட் பாரூக் என்பவர் பற்றி எமது வாசகர்களுக்காக…

இவர் நிக்கவரெட்டிய எனும் இடத்தை பிறப்பிடமாக கொன்டவர் தனது இளமைக்காலம் முதல் பல்வேறு பட்ட சமூக சேவையில் ஈடு பட்டவர் என்றால் அது மிகையாகாது.

சிங்கள மொழியில் புலமை வாய்ந்த இவர் முஸ்லீம்கள் பற்றி சகோதர இனத்தவருக்கு இருக்கும் தவறான அபிப்பிராயம் அது போன்று முஸ்லீம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் போன்றவற்றுக்கு தனி மனிதனாக நின்று சமூக வலைதளங்களில் நேரலை வாயிலாக தைரியமாக உண்மைக்கு புரம்பான விடயங்களை தோழுரித்துக்காட்டியுள்ளார்.

பல எதிர்ப்புகள் வந்த போதும் தைரியமாக எதிர் கொண்டு தனது சமூகப்பணியை செய்தவர்.

அது மட்டுமன்றி தன்னால் பல்லின சமூகத்தில் வருமைக்கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களுக்கு உதவி செய்வதற்க்காக அஹமட் பாரூக் பவுண்டேஷன் எனும் ஒரு அறக்கட்டளை தொண்டு நிறுவணத்தை நிறுவினார் அதனூடாக கிராமங்கள் தோறும் தனி மனிதனாக சென்று மத வேற்றுமைகள் பாராது அனைத்து இன மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்தார். நிதி பற்றாக்குறை காரணமாக அதனை தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் தற்போது அதன் செயற்பாடுகள் ஸ்தம்பித்திருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இவர் எமது சமூகத்துக்காக ஆற்றிய பங்களிப்பானது நிச்சயம் போற்றப்பட வேண்டியது சமூக சேவையாளருக்காண விருதினை பெற தகுதி வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு சமூக சேவையாளன் இந்த இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த ஒரு அன்பழிப்பு என்றே கூற வேண்டும். இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை கௌரவிப்பது சமூக மேம்பாட்டு அமைப்புகள் ஒன்றிங்களின் பொருப்ல்லவா? சஹோ. அஹமட் பாருக் அவர்களின் சமூகப்பணி தொடர எமது ஊடகத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

A.A.Riyas.

Leave a Reply