இலங்கையில் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு பல அசௌகரியங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.

இதனடிப்படையில் சென்ற வருடம் 2019ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பெறுபேறுகளை எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அதுவும் பிற்போடப்பட்டு கடைசியாக இந்த மாதம் (ஏப்ரல்) இறுதிக்குள் வெளிடுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்திருந்தது.

அதன் ஒரு கட்டமாக பரீட்சை பெறுபேறுகள் கணனிமையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருகின்றனர்.

மீளாய்வு முடிவடைந்ததும் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

Leave a Reply