இந்த அவசரகால நிலையில் குச்சவெளி, நிலாவெளி, புல்மோட்டை வைத்தியசாலைகளில் சக்கர நாற்காலிகள் குறைபாடாக உள்ளதை கருத்தில்கொண்டு UnV நிறுவனம் மற்றும் சகோதரர் பாதிஹ் கஸ்ஸாலியின் (ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ) அல்ஹித்மத்துல் உம்மா நிறுவனம் ஆகியன இணைந்து தலா இரண்டு சக்கர நாற்காலிகளை வைத்தியசாலை பொறுப்பதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
கிண்ணியா நகர பிதா கௌரவ நளீம்,குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் கௌரவ அப்துல்லா ஆசிரியர், UnV நிறுவன செயலாளர் அப்துல் சமத் சதாத் உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.