நேற்று நடந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கருத்து தெரிவிக்கையில் கொழும்பு நகரத்திற்கு பிரவேசிக்கும் 16 இடங்களை உள்ளடக்கிய வகையில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் அத்தியாவசிய தேவைக்கு பயணிப்பவர்கள் சுகாதார ஒழுங்கு முறைகளை பேணவும் தவறும் பட்சத்தில் அதற்குறிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சட்டத்தரணிகள் தமது வீடு மற்றும் நீதிமன்றங்களுக்கிடையிலான பகுதிக்கிடையில் ஊரடற்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் சட்டத்தரணிகள் கடமைக்கான சீருடையில் இருப்பது கட்டாயமாகும். அதே போன்று அவர்கள் அந்த சந்தர்பத்தில் கடமையிலிருக்கும் பாதுகாப்பு பிரிவினரிடம் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

Leave a Reply