கொரோனா இலகுவாக தாக்கும் இரத்தவகை இதுதான் - அதிர்ச்சி தகவல்!KVC News

சுமார் 2500 பேரைக்கொண்ட கொரோனா நோயாளிகளை ஆராச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உணவு பழக்கம் முதட்கொண்டு அவர்களின் பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் போன்ற சகல விடயங்களும் ஆய்வில் கவணத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியான அதிர்ச்சி தகவல் என்னவெனில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2500 பேரில் சுமார் 65% சதவீதம் பேர் “A” குரூப் இரத்த வகையை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, Group A +, Group A -, Group AB+, Group AB- போன்ற இரத்த வகைகளைக் கொண்டவர்களே இலகுவில் இந்த வைரஸினால் தாக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் Group ‘ஓ’ பாசிட்டிவ், ‘ஓபி’ பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ‘ஓ’ நெகட்டிவ் இரத்த வகைகளைக் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.

‘O ’ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்பது அர்த்தம் அல்ல, அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது என்பதே உண்மையாகும். ஆனால் ‘A ’ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் இவ்வாய்வை செய்துள்ளது.

By Admin

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.