Coronavirus- கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமியே நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடவுள் கனவில் வந்து (Coronavirus) கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி வழங்க வேண்டுமென கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கின் அமைந்துள்ள பிராமணி தேவி கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா(72) என்பவரே இதனை செய்துள்ளார். இவர் இரண்டு நாட்களுக்கு முன் 52 வயது நபரை கோவில் வழாகத்துக்குள் அழைத்து வந்து கடவுள் முன்னிலையில் அவரின் தலையை துண்டாக வெட்டி பலி கொடுத்துள்ளார்.
பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்து போலீசாரிடம் சன்சாரி கூறுகையில், என் கனவில் பிராமணி தேவி அம்மன் வந்து நரபலி கேட்டார், அப்படி செய்தால் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு முடிவுக்கு வரும் என கூறினார். கடவுளே வந்து சொன்னதால் தான் இப்படி செய்தேன் என கூறி உள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சன்சாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.