பாசமலையோ பருமனாகிப்போனாலும்
பக்கத்தில் நீ இல்லாததால்
பாசம் வைத்த என் நெஞ்சு மட்டும் …. பாதருகிறது …
கவலை குடிகொண்டு
என் நெஞ்சு கணக்கிறது …
கல் நெஞ்சமா என் நெஞ்சு ?? இல்லை !!
கணத்துப்போவதால் – நான் களைத்துப்போய் இருக்கிறேன் கத்த முடியாமல் …!!
உன்னை விட்டும்
என்னை தூரத்தில் துரத்தியதை – துயரம் என்பதா?
துருப்பிடித்த துரதிஷ்டம் என்பதா ??
மொத்தத்தில் நான் – உன்
முத்தத்தை முகரமுடியாமல்
வலிகளோடு வழி தேடி
வாழ்க்கைக்கு வரவு தேடி
பாலை வணத்தினிலே வருடங்கள் கரைகிறது
உன்னிடம் வர முடியாமல் !!
உன் மழலைகள் மறைந்து போகும் முன்னர்
உன் குறும்புகள் குறைந்து போகும் முன்னர்
உன் பிடிவாதம் பிரிந்து போகும் முன்னர்
உன்னைக் காண மிக விரையில் வந்து சேருவேன் ….
கவிதை வரிகள் : A. R. Muza
குரல் : Athik