Google duo செயலியில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோகால் லிமிட் 32 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது. கூகுள் டுயோவில் கூடுதல் இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூகுள் டுயோ செயலியின் Settings பகுதியில் புதிதாக ‘Add Account’ என்ற தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மொபைல் எண் அல்லது ஈமெயில் முகவரி என இரண்டில் எந்த வகையில் டியோ அழைப்புகள் வரவேண்டும் என்பதை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது புதுப்பிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் இப்போது க்ரோம்-க்கான வலைப்பதிவில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ கால் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Familymode சேவையும் அறிமுகம்
அதேபோல் கூகுள் டுயோ ஒரு புதிய குடும்ப பயன்முறை சேவை அதாவது Familymode ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இது குடும்ப உறுப்பினர்கள் பங்குபெரும் வீடியோகால் சேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.