பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்த ஞானசார தேரர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாக திருக்குர் ஆனை தடை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார் இந்த காணொலி சமூக வலயதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் பேசுகின்ற போதே இவ்வாறு தெரிவித்தார். முஸ்லீம்கள் உயிரிலும் மேலாக கருதும் புனித திருக்குர் ஆனை தடை செய்யுமாறு கூறிய இந்த விடயமானது ஒட்டு மொத்த உலக முஸ்லீம்களின் உள்ளங்களையும் புண் படுத்தியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.