வெளியாகியது விபரம்
👇👇👇

அல்குர்ஆனின் முடி விவகாரத்தைத் தேடத்தேட ஆச்சரியங்களே வந்து குவிகின்றன. நான் இறுதியில் பதிவிடுகின்ற இணைப்பு கடந்த 18/01/2020 அன்று யூடியூப்பில் பதிவிடப்பட்ட ஒரு காணொளி. அதில் குறித்த குர்ஆனில் முடி விவகாரத்தின் யதார்த்தம் அன்றே பதிவிடப்பட்டிருக்கிறது.

அப் பதிவில் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வட்சப் உரையாடல் பதிவிடப்பட்டிருக்கிறது. குறித்த பெண் ஷீஆக்களின் ஆன்மீக வழிகாட்டியான வழிகேடன் கொமைனியிடம் குறித்த நோய் குறித்து விசாரிக்கையில் அவர்தான் “குர்ஆனில் சூறா பகராவில் ஒரு முடி இருக்கும். அது அண்மையில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் சிக்குண்டு மரணித்த, ஈராக்கிலும், சிரியாவிலும் அத்தனை மனிதப் பேரவலங்களுக்கும் காரணமாக இருந்த ஈரானின் அதி முக்கிய இராணுவத் தளபதி “காசிம் சுலைமானி” என்பவனுடைய முடி எனவும், அதை எடுத்து தண்ணீரில் ஊரவைத்து குடிக்குமாறு சொன்னதாக அப்பெண் சொல்கிறாள்.”

இதன் உண்மை நிலை இதுதான். இதைத்தான் தமிழ் உலகில் உள்ள யாரோ இட்டுக்கட்டி உலா வர விட்டுள்ளனர். “காசிம் சுலைமானியின்” முடி தான் நீங்கள் குர்ஆனில் பகரா பக்கங்களில் உள்ளதாக நம்பும் முடி.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். வெறுமனே ஒரு தகவல் வந்தால் அதை அப்படியே நம்பி விடக்கூடாது. காசிம் சுலைமானியின் கொடுங்கோண்மைக்கான அடையாளங்கள் தான் இன்றைய ஈராக்கும், சிரியாவும். மேலோட்டமான சிந்தனைகளைக் கொண்ட சமூகத்தின் மத்தியில் ஹரம் ஷரீபில் இருந்தவர், மகான், பெரியார் போன்ற வார்த்தைகளால் வடிவமைத்து யாரோ ஒரு பாவி செய்த கெடுதி முழு ஈமானிய சமூகத்தையும் பாதித்துள்ளது.

அல்குர்ஆனின் அற்புத தன்மைகள் ஏராளமானவை. வார்த்தைகள் முழுக்க ஆன்மீக வாசம் வீசும் அல்குர்ஆனை வெறும் முடி தேடும் விடயாமாய் ஆக்கியவர்கள் தௌபாச் செய்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அல்குர்ஆனைக் கொண்டு நேர்வழி காட்டிவானாக.

குறித்த விடயத்தை உறுதிப்படுத்தும் இணைப்பு…

ஏஜீ. சாதிக்கீன் (பலாஹீ)
முதுமாணி மாணவன்
மதீனாப் பல்கலைக் கழகம்.

By Admin

Leave a Reply