கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு மென்பொருள் வசதியும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் குரோம் 89 என்ற புதிய பிரவுசர் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. அதைப் பற்ற சற்று விரிவாகப் பார்ப்போம்.
குரோம் 89 பிரவுசர்
குரோம் 89 என்ற புதிய பிரவுசர் வெர்ஷனில் அதிவேக செயல்பாடு மற்றம் அதிக திறன் கொண்ட நினைவகம் இருப்பதாக கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த புதிய வெர்ஷன் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றேகூறலாம்.
குறிப்பாக குரோம் 89 என்ற புதிய பிரவுசர் வெர்ஷன் ஆனது விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று கூறப்படுகிறது. பின்பு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த புதிய குரோம் 89 பிரவுசரை பயன்படுத்தும் போது பார்க்க முடிவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விண்டோஸில் ஒவ்வொரு டேபிலும் சராசரியாக 100 எம்பி வரையிலான மெமரியை மீட்டெடுக்க இந்த குரோம் 89 உதவுகிறது என்று கூறப்படுகிறது. பின்பு நாம் பிரபலமாக பயன்படுத்தும் டேபில் 20 சதவிகிதம் வரை மெமரியை சேமிக்க உதவுவதாகவும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
லைவ் கேப்ஷன்
மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களில் லைவ் கேப்ஷன் வசதியையும் இந்த புதிய பிரவுசர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லைவ் கேப்ஷன் ஆனது ஒரு ஆடியோ பிளேயிங்கை மொழிபெயர்க்கும் திறன் கொண்ட ஒரு அம்சமாகும். குறிப்பாக லைவ் கேப்ஷன் சில கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அணுக கிடைத்தது. ஆனால் இப்போது டெஸ்க்டாப்பில் உள்ள குரோம் பிரவுசருக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
குரோம் 89 வெர்ஷனில் இந்த லைவ் கேப்ஷன் வசதி அணுக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதை எனேபிள் செய்யும் வழிமுறைகளைஇப்போது பார்ப்போம்.
வழிமுறை
- முதலில் நீங்கள் குரோம் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.
- பின்பு அட்வான்ஸ்டு பிரிவில் உள்ள Accessibility தேர்வு செய்யவும்.
- அடுத்து Accessibility விருப்பத்திலிருந்து லைவ் கேப்ஷனை அம்சத்தை பார்க்க முடியும்.
- பின்னர் நீங்கள் லைவ் கேப்ஷனை தேர்வு செய்தவுடன், குரோம் சில speech recognition கோப்புகளைப் பதிவிறக்கும்.
- குறிப்பாக இந்த கேப்ஷன்கள் ஒரு பாப் அப் விண்டோவில் தோன்றும். அதாவது நீட்டிக்கக்கூடிய வீடியோவின் அடிப்பகுதியில்
பார்க்க முடியும். - அதன்பின்னர் சுவாரசியமாக இந்த விண்டோவை உங்களின் வசதிக்கு ஏற்ப நகர்த்தலாம்.
தற்சமயம் வரை இந்த லைவ் கேப்ஷன் அம்சம் ஆங்கிலத்திற்கு மட்டுமே இயங்குகிறது என்றும். ஆனால் அதிகமானமொழிகளுக்கான ஆதரவு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது
By : Gizbot Tamil