குச்சவெளி கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் வங்கி கிளையில் ATM வசதி இல்லாமையினால் மக்கள் அவசர பணத்தேவையினை பூர்த்தி செய்ய முடியாமல் பல அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் இந்த கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் வங்கியில் Atm வசதி இல்லாமையின் காரணமாக ஊரடங்கு தழர்த்தப்படும் வேளையில் அதிக சன நெரிசல் காணப்படுகின்றது.

இங்குள்ள மக்கள் Atm யில் பணம் மீளப்பெறுவதாயின் சுமார் 32Km அப்பால் உள்ள திருகோணமலை நகரத்திற்க்கே செல்ல வேண்டியுள்ளது தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் திருமலை பயணம் சாத்தியப்படாத ஒன்றாக காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திரியாய்,புடவைக்கட்டு,குச்சவெளி,வடலிக்குளம்,பள்ளுவைக்குளம்,ஹிஜ்ரா புரம் போன்ற பகுதி வாழ் மக்கள் இந்த மக்கள் வங்கி கிளையிலே தமது கணக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply