ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் திட்டத்துடன் கூடிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடளாவிய வயல் காணிகளை துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட காணிகளினை துப்பரவு செய்யும் பணி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் பிரதியமைச்சருமாகிய கௌரவ சுசந்த புஞ்சிநிலமே அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அது தொடர்பான பொது மக்கள் சந்திப்பு 11.02.2020 இன்று மாலை 04.00 மணிக்கு தி/அந்நூரியா பாடசாலையில் நடைபெற்றது. பிரதேசத்தின் செஞ்சாலி , அணைக்கட்டு, இழைந்தக்குழம்,தொடக்கம் கைநாட்டான் வரையுள்ள அனுமதிப் பத்திரமுள்ள காணிகளை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் இன்று தி/அந்- நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply