தற்போது நாட்டையே அச்சுறுத்தும் COVID-19 தாக்கம் காரணமாக மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அத்துடன் பிரதேச சபையினால் அரச,தனியார் துறையில் மக்கள் பயன்பாடு அதிகமாகவுள்ள இடங்கள், கட்டிடங்கள், துப்பரவு செய்யப்பட்டு வருவதுடன் கிருமிநாசினிகள் தெளிக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதற்கமைய குச்சவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 04.04.2020 ம் திகதி மாலை தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று! தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்காகவே சேவையாற்றும் துறைகளில் ஒன்றான இவர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்குமுகமாக 05-04-2020 திகதி குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் நேரடிக் கண்கானிப்பில் குச்சவெளி பொலிஸ் நிலைய வளாகம் சிரமதான பணி மூலம் துப்பரவு செய்யப்பட்டது.இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் A.C.M.மீசான், குச்சவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , பிரதேச சபையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply