நாட்டை மிகவும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் மிகவும் கஸ்ட்டப்படுவதுடன் தங்களின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இக்பால் நகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்குவது தொடர்பாக இக்பால் நகர் பிரதேசத்தின் முக்கியஸ்தர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று 21.04.2020 குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ A.முபாரக் அவர்களின் தலைமையில் குச்சவெளி பிரதேச சபை தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் குறித்த பகுதிகளுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இப்பகுதிகளுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கௌரவ A.முபாரக் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்படும்.