தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்றன Covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிற இந்த சூழ்நிலையில் திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களின் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் கஷ்டப்படுவதாக திருகோணமலை சிறைச்சாலை உத்தியோகத்தர் தவிசாளரிடம் எடுத்துரைத்தார். அதற்கமைய இன்று 07.04.2020ம் திகதி திருகோணமலை சிறைச்சாலைக்கு குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்கள் நேரடியாக சென்று அங்குள்ள கைதிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்கு, பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சிறைச்சாலை உத்தியோகத்தர் M.முபாரக் அவர்களிடம் கைதிகளுக்கான உதவி பணத் தொகையை வழங்கி வைத்தார்.