குச்சவெளி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடந்த 15வருடங்கள் கடமையாற்றிய அப்துல் முத்தலிப் அப்துல் நயிம் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்.
இவர் கடந்த காலங்களில் நேரகாலம் பாராமல் சமூக அக்கரையுடன் திடீர் மரணங்கள் ஏற்படும் இடத்து சம்பவ இடத்திற்க்கு சென்று எவ்வித சிரமங்களும் அசௌகரியங்களையும் அங்குள்ளவர்களுக்கு ஏற்படுத்தாமல் மிக நிதானமாக செயற்ப்படுவதில் அதிகளவான மக்களின் நன் மதிப்பை பெற்றார்.
கடந்த காலங்களில் கடற்றொழில் கூட்டுறவு சங்க தலைவராகவும்,பிரதேச சமாதான மன்டப (Mediation board)அங்கத்தவராகவும்,மாவட்ட சமாதான நீதவானாகவும்,ஜாயாநகர் சமுர்த்தி செயலனி தலைவராகவும் தன்னாலான பல சமூகம் சார்ந்த விடயங்களில் அக்கரை காட்டியுள்ளார்.
அகில இலங்கை சமாதான நீதவானுக்கான நியமனம்,மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடந்த காலங்களில் ஆற்றிய சேவைக்கு குச்சவெளியின் பொறுப்பு வாய்ந்த ஒரு ஊடகமாக வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.