குச்சவெளி வடலிக்குள வீட்டுத்திட்டம்,நான்காம் வட்டாரம் பகுதிகளில் அதிகமான நரிகள் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர் நேற்றைய தினம் வடலிக்குள குடியிருப்புப் பகுதியில் வீடொன்றிற்க்குள் புகுந்த நரி அங்கிருந்த ஒருவரை கடித்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். நான்காம் வட்டாரத்தைச்சேர்ந்த சைக்கில் திருத்தும் நபர் ஒருவர் தமது வீட்டு முற்றத்தில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு வெளியில் சென்ற வேளை தன்னை தாக்க நரி பாய்ந்து வந்ததாக தெரிவித்தார் அதனிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள வீட்டிற்க்குள் பாய்ந்ததாக தெரிவித்தார் மேலும் பேசுகையில் நாய்கள் கூட்டமாக நிற்க்கும் இடத்தில் அதனுடன் கலந்து நிற்பதால் இலகுவில் இனங்கான முடியாது என்று கூறினார்.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.

Leave a Reply