இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் படைத்தவர்கள் தான் அதிகம் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வருவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனை BrokerChooser என்ற முதலீடு சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் இந்தியா அதிக கிரிப்டோகரன்சி உரிமையாளர்களை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7.3 சதவிகிதம் பேர் கிரிப்டோகரன்சியை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிகளவிலான கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதென்ன கிரிப்டோகரன்சி?
“கணினியில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி, அல்காரிதம் மூலமாக கணக்குகளை என்க்ரிப்ட் செய்து, சில பிரோக்ராம்கள் வடிவமைத்து, இதை உருவாக்குவதால் கிரிப்டோ கரன்சினு பெயர் வந்திருக்கு.
ரூபாய், டாலர், யூரோ என வெவ்வேறு நாடுகளின் கரன்சிகளை அடையாளப்படுத்துவது போல பிட் காயின், நேம் காயின், ஸ்விப்ட் காயின் என பல்வேறு பெயர்களில் கிரிப்டோ கரன்சிகள் வெளியாகி வருகின்றன. கம்யூட்டர் புரோக்ராமிக்கிங் சாப்ட்வேர் நன்கு தெரிந்த யார் வேண்டுமானாலும் கிரிப்டோ கரன்சிகளை உருவாக்கலாம். கிரிப்டோ கரன்சி வாங்க எண்ணுபவர்கள் அதற்கென உள்ள ஏஜென்சிகள் மூலமாகவும், டிஜிட்டல் வாலட்கள் மூலமாகவும், தெரிந்தவர்கள் மூலமாகவும் கிரிப்டோ கரன்சிகளை வாங்கலாம்.
நம்மிடம் உள்ள மணி பர்ஸ் போல இணைய உதவியோடு இயங்கும் கிரிப்டோ கரன்சிக்கு என பிரத்யேகமாக ஒரு இ – வாலட் உள்ளது. அதனை பயனப்டுத்தி பிட் காயின், நேம் காயின் மாதிரியான கிரிப்டோ கரன்சிகளை வாங்கிக் கொள்ளலாம். அதேபோல நமக்கு கிரிப்டோ கரன்சிகள் வேண்டுமென்ற போது அதை இணையத்திலேயே விற்பனையும் செய்துவிடலாம். இந்த கரன்சிகளை வாங்க ஒரு வங்கி கணக்கு மட்டுமே தேவைப்படுகிறது. அது உலகின் எந்த பகுதியில் யார் பெயரில் வேண்டுமானாலும் இருக்கலாம்” என விளக்கம் கொடுத்துள்ளார் நிதித்துறை ஆலோசகர் தமிழ்வாணன்.