ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் புத்தகம் கவுரவித்து வருகிறது.

இதனடிப்படையில் 2019ம் ஆண்டிற்கான சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் (சகலதுறை வீரர்) பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தெரிவு செய்யப்பட்டார்.

இவர் கடந்த ஆண்டு (2019) கிரிக்கெட் உலகக் கோப்பை (Icc World Cup) போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. மேலும் அதே ஆண்டில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இவரின் பங்களிப்பு மிகையாகாது என்று கூட கூறலாம்.

இவ்விரண்டு ஆட்டமும் தான் இந்த கவுரவத்தை கொடுத்தது. இந்த கவுரவத்தை இங்கிலாந்து அணி 2005ம் ஆண்டு பெற்றதன் பின்னர் 2019ம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply