Q1. எவ்வாறு வசிப்பதற்கு காணி ஒன்றினைப் பெற்றுக் கொள்வது ?
தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்குச் சென்று பிரதேச செயலாளரைச் சந்தித்து தமது வேண்டுகோளினை எழுத்து மூலம் சமர்ப்பியுங்கள். காணி இல்லாதவர்களைப் பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் மாதிரி விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் காணிக் கச்சேரி நடைபெறும் சந்தர்ப்பத்தில் முன்தோன்றி தகைமைபெற இடம் கிடைக்கும்.
Q2. நீண்ட காலம் தொடக்கம் அங்கீகாரமின்றி பிடித்து பயன்பெறும் காணிக்காக எவ்வாறு அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக்கொள்வது?
தற்போது அங்கீகாரமற்ற குடியிருப்பாளர்களை ஒழுங்கு படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், நீங்கள் காணி இல்லாத ஒருவராயின் காணிக் கச்சேரி முறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட காணி அல்லது காணியின் ஒரு துண்டு ஒன்றினை சட்ட ரீதியாகப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்.
Q3. அரச காணி ஒன்றின் உரிமை உரித்தாகுவது கொள்வனவு செய்த காணியின் உரிமை முறையிலா? இல்லையாயின் அம் முறையினை விபரியுங்கள்.
இல்லை. அரச காணிகளின் உரிமை வேறு முறையிலயே கையளிக்கப்படுகின்றது. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் ஒன்று அல்லது மானிய உறுதியாயின் உரிமையாளர் மரணம் எய்துமிடத்து துணைக்கு வாழ்வதற்கு உரிய உரிமை மட்டும் கிடைக்கும் . எனினும், துணை பதிலாளராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விடத்து முழுமையான உரிமை கிடைக்கப்பெறும். உரியவர் மரணம் எய்து மிடத்து பதிலாளராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவருக்கு உரிமை கிடைக்கும். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத விடத்து சட்டத்தின் III அட்டவணைக்கு இணங்க மூத்த ஆண் பிள்ளைக்குக் கிடைக்கும்.
Q4. சுவர்ண பூமி உறுதி, ஜய பூமி உறுதி . ரன்பூமி உறுதிக்கு பதிலாளர்களை பெயரிடுவது எவ்வாறு ? விபரியுங்கள்.
பிரதேச செயலாளர் காரியாலயத்தின் காணிப் பிரிவிற்குச் சென்று தமது தேவைகளைத் தெரிவியுங்கள். அப்போது கா. ஆ.155 படிவங்கள் 3 உங்களுக்கு வழங்கப்படும். அதனைப் பூர்த்தி செய்து செல்லுபடியான 25 ரூபா பெறுமதியான 3 முத்திரைகளுடன் ஒப்படைத்த பின் அது உரிய மாவட்டத்தின் காணி பதிவாளர் காரியாலயத்தில் பதிவு செய்யப்படும்.
Q5. உறுதி ஒன்றினை( மானியப் பத்திரம்) வங்கியில் வைத்து கடனைப் பெற்றுக்கொள்ள முடியுமா ?
ஆம் இயலும். இலங்கை மத்திய வங்கியின் ஆளுனரினால் 1988 இன் 78 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் மற்றும் 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தாபனங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இங்கு உங்களினால் பின்வரும் ஆவணங்களை பிரதேச செயலாளருக்கு முன்வைத்து அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- உரிய வங்கியிலிருந்து பெற்ற கடிதம்.
- உங்களது வேண்டுகோள் கடிதம்.
- மானியப் பத்திர ( உறுதியின்) பிரதி ஒன்று )
- காணி ஆணையாளர் காரியாலயத்திலிருந்து பெற்றுக்கொண்ட காணி விபரம்
Q6. உறுதி ஒன்று (மானிய பத்திரம்) எவ்வாறு வெளியாட்களுக்கு ஒப்படைப்பது ? அதனை தெளிவு படுத்துங்கள்.
உறுதி ஒன்று இரத்த உறவாளருக்கு மட்டமே கையளிக்க முடியும்.(III அட்டவணைக்கு இணங்க) எனினும் உறுதிக்கு உரித்து உடையவர் அல்லது குடும்பத்தினர் அநாதை நிலமைக்கு உட்படாத விடத்து விவசாய வகுப்பினைச் சேர்ந்த ஒருவருக்குக் கையளிக்கச் சந்தர்ப்பம் உண்டு. .
Q7. அரச காணி ஒன்றினை எவ்வாறு நீண்ட காலக் குத்தகைக்குப் பெற முடியும்?
- டென்டர், காணிக் கச்சேரி ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு
- புண்ணிய, சமய அல்லது விஞ்ஞான நடவடிக்கை ஒன்றுக்காக அரச காணி ஒன்றினை கேட்டுக்கொள்ளும் ஒருவருக்கு
- சமூக நடவடிக்கைகளுக்காக சமூக சங்கங்களுக்கு
- அரசுக்கு இணைந்ததாக ஸ்தாபிக்கப்பட்ட தாபனங்களுக்கு ( வங்கி, கூட்டுத்தாபனம்,சபை)
வர்த்தக அல்லது விவசாய செயற்றிட்டங்களுக்கு
Q8. நீண்ட கால அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளத் தேவையான ஆவணங்கள் என்ன ?
- தனிநபர் ஒருவராயின், வேண்டுகோள் ஏதாவது ஒரு அனுமதிப் பத்திரம் அல்லது எழுத்து மூலமான அங்கீகாரம் இருந்தால் அந்த அனுமதிப் பத்திரம் அல்லது அங்கீகாரப் பத்திரம். சத்தியக் கடதாசி (தம்மிடம் காணப்படும் இடவசதி 50 ஏக்கர்களின் எல்லைக்கு உட்பட்டது எனவும், பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட படிவத்திற்கு இணங்க)
நில அளப்பு வரைபடம் அல்லது முழு துணைப் பிரிப்பு குத்தகை செலுத்தப்படுவதற்குரிய சத்தியக் கடதாசி - பொதுச் சங்கம் ஒன்றாயின், சங்கத்தின் வேண்டுகோள் பதிவு செய்த சான்றிதழ் சங்கத்தின் யாப்பு சத்தியக் கடதாசி நில அளப்பு வரைபடம் அல்லது முழு துணைப் பிரிப்பு
- வரையறுக்கப்பட்ட சங்கம் ஒன்றாயின், பதிவு செய்த சான்றிதழ் பணிப்பாளர்களின் பெயர் செயற்றிட்ட அறிக்கை சத்தியக் கடதாசி நில அளப்பு வரைபடம் அல்லது முழு துணைப் பிரிப்பு
Q9. குத்தகை உறுதி ஒன்றில் காணப்படும் நிபந்தனைகள் என்ன ?
- குத்தகைக் காலம் 30 வருடங்கள்.
- வருடாந்த குத்தகையினைச் செலுத்த வேண்டும்.
- ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறை 5% இனால் குத்தகையின் அளவு திருத்தப்படும். (இது வசிப்பிடக் காணிக்கு உரியதன்று)
- காணியினைப் பெற்றுக்கொண்ட விடயத்திற்கு மாறான விடயத்திற்குப் பயன்படுத்த முடியாது.
- காணியினை சிறந்த அபிவிருத்தி நிலமையில் பேணிச் செல்ல வேண்டும் காணி ஆணையாளரின் ஒழுங்கான முன் அனுமதியின்றி உப குத்தகை, அடகு மற்றும் கையளிப்பது இடம்பெறக் கூடாது.
- குத்தகைக்கு வழங்கும் நோக்கிற்கு உரியதாக விசேட நிபந்தனைகளை முன்வைக்க முடியும்..
நிபந்தனை மீறப்படும் சந்தர்ப்பத்தில் குத்தகையினை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Q10. காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இது வரை வழங்கப்பட்டுள்ள உறுதிகள் யாவை ?
- சுவர்ண பூமி
- ஜய பூமி
- ரத்ன பூமி
- ரண்விம
Q11. உறுதி ஒன்றில் காணப்படும் முக்கியத்துவம் யாது ?
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நீங்கள் இது வரை அனுமதிப் பத்திரம் ஒன்றின் கீழ் அபிவிருத்தி செய்த காணியின் முழு உரிமையும் சட்டரீதியாக வழங்கும் ஆவணம் ஒன்றாகும்.
Q12. உறுதி ஒன்றினைப் பெற்றுக் கொள்ளத் தேவையான தகைமைகள் என்ன ?
- உங்களுக்கு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் உறுதி ஒன்றின் கீழ் காணி ஒன்று கிடைத்திருக்க வேண்டும்.
- காணி நன்றாக அபிவிருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- வசிப்பதற்கு வழங்கப்பட்ட காணியாயின் வீட்டினைக் கட்டி வசித்திருக்க வேண்டும்.
- அரசுக்குச் செலுத்த வேண்டிய நிதி செலுத்தி முடித்திருக்க வேண்டும்.
Q13. உறுதி ஒன்றினை எவ்வாறு பெற்றுக் கொள்ளமுடியும்?
- நீங்கள் மேற் கூறப்பட்ட தகைமை பெற்றிருந்தால் உங்களது விண்ணப்பப் படிவத்தினை கிராம அலுவலகர் அல்லது வெளிக்கள ஆலோசனையாளருக்கு ஒப்படையுங்கள்.
- கிராம அலுவலகர் அல்லது வெளிக்கள ஆலோசனையாளர் காணியினைப் பரிசோதனை செய்து அறிக்கை ஒன்றை பிரதேச செயலாளருக்கு ஒப்படைப்பர்.
- காணி அலுவலகரும், கொளனி உத்தியோகத்தரும் காணியினைப் பரிசோதித்துப் பார்த்து நீங்கள் காணியினை மேம்பாடு செய்துள்ளீர்கள் என உறுதிப்படுத்தி அறிக்கை ஒன்றினை பிரதேச செயலாளருக்கு முன்வைப்பர்.
- பிரதேச செயலாளர் நில அளவைத் திணைக்களத்தின் மூலம்காணியினை அளந்து எல்லைக் கற்களை இட்டு வரைபடத்தினைப் பெற்றுக்கொள்வர்.
Q14. உறுதி மற்றும் அனுமதிப் பத்திரத்திற்கு இடையே காணப்படும் வேறுபாடு என்ன ?
- அனுமதிப் பத்திரம் என்பது தற்காலிக ஆவணம் ஒன்றாகும்.
- அது நிபந்தனைக்கு உரியதாகும்.
- நிபந்தனை மீறப்பட்டால் அனுமதிப் பத்திரத்தினை இரத்துச் செய்ய முடியும்.
- அதன் நிலஅளவை வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.
- அனுமதிப் பத்திரம் பிரதேச செயலாளரினால் கையெழுத்திடப்படும்.
- உறுதியில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார்.
- எனவே காணியின் உரிமை முழுமையாகக் கிடைக்கப் பெறும்.
Q15. உறுதி ஒன்றினால் எங்களுக்கு கிடைக்கும் பலாபலன் என்ன?
உங்களது காணியினை மேம்படுத்த அல்லது வீடு ஜன்னல்களை பழுதுபார்ப்பதற்காக கடன் நிதியினை பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்படுமிடத்து உங்களது தூய்மையான உறுதியினை வங்கியில் அடகு வைக்க முடியும்.
உங்களது பிள்ளை ஒருவரின் கடன் நிதிக்காக பிணையாக வைக்க முடியும்.
Q16. உறுதி ஒன்றின் உரிமை( பின் உரிமை) யினை வழங்குதல்.
- உறுதி ஒன்றின் மூலம் கிடைத்த காணி ஒன்றின் உரிமையினை தமது மனைவி/ கணவன்,
- பிள்ளைகளுக்கு அல்லது இரத்த உறவுகளுக்கு மட்டுமே வழங்க முடியும்.
- நீங்கள் விரும்பினால், உறுதியில் உள்ள வரையறைக் இணங்க, தமது பிள்ளைகளுக்கு பங்கு ஒன்றினை வழங்க முடியும்.
- தேவையாயின் தமது மனைவி அல்லது கணவனுக்கு உரிமையினை பெற்றுக்கொடுக்க முடியும் இல்லையாயின் தமது இரத்த உறவு ஒருவருக்கு உரிமையினை பெற்றுக்கொடுக்க முடியும்.
- உங்களது காணியின் பின் உரித்து எவருக்குக் கிடைக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு உரியது. உங்கள் மனைவிக்கு/ கணவனுக்கு பிள்ளைக்கு அல்லது இரத்த உறவுக்கு என்ற வகையில் எவரையும் பெயர் குறிப்பிட உங்களுக்கு இயலும்.
- பின் உரித்தாளி பெயரிடாத உறுதியின் உரித்தாளி ஒருவர் மரணம் அடைந்தால்………….
உறுதியின் உரித்தாளிக்கு இருந்த ஆண் பிள்ளைக்கு முதலாவது உரிமை உரித்தாகும்.
Q17. உரிமையினை எவ்வாறு பெயரிடுவது ?
- இதற்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
- பிரதேச செயலாளர் காரியாலயத்திலிருந்து 155 படிவத்தினைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பூரணப்படுத்தி மீண்டும் ஒப்படையுங்கள்.
- அப் படிவத்தினை நொத்தார்சி ஒருவர், சமாதான நீதிவான் ஒருவர், காணிப் பதிவாளரின் மூலம் சான்றுப் படுத்திக்கொள்ள முடியும்.
- அந்த சான்றுப் படுத்தலை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இலகுவாகவும், மற்றும் கட்டணம் இன்றியும் செய்து கொள்ள முடியும்.
- அவ் ஆவணங்கள் காணிப் பதிவாளர் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கு பிரதி ஒன்று ஒப்படைக்கப்படும்.
- இப் பிரதியினை பாதுகாப்பாக வையுங்கள்.
Q18. பெயரிடலை இரத்துச் செய்ய முடியுமா ?
முடியும்.
- உங்களுக்குத் தேவையானவர்களை பெயரிட்டு, புதிய படிவங்கள் 03 பதிவு செய்யப்பட்டால் முன்னர் செய்த பதிவு இரத்தாகும்.
- மேலதிக விபரங்களை அறிவதற்காக பின்வருவோரைச் சந்தியுங்கள். கிராம அலுவலகர் பிரதேச செயலாளர் காரியாலயத்தின் கொளனி அலுவலகர்/ காணி அலுவலகர் உதவிப் பிரதேச செயலாளர்/ பிரதேச செயலாளர்
Q19. உறுதியை வைத்து கடன் அல்லது ஈடு ஒன்றினை எப்படிப் பெறுவது ?
- உங்களது வேண்டுகோளினை பிரதேச செயலாளருக்கு முன்வைக்க வேண்டும். அவர் கிராம அலுவலகர்/கொளனி அலுவலகரிடமிருந்து அறிக்கை ஒன்றினைப் பெற்றுக்கொள்ளப்படும்.
- அவ் வேண்டுகோள் உடன் ஆரம்ப உறுதி , அது பதிவு செய்யப்பட்டுள்ள காணிப்பதிவாளர் காரியாலயத்திலிருந்து பெற்றுக்கொண்ட காணி விபரங்களின் பிரதியினை சமர்ப்பிக்க வேண்டும்.
- கடன் அல்லது அடகுபிடிக்க அல்லது அடகு வைக்க எதிர்பார்க்கும் தாபனத்தின் கடிதம் ஒன்றுடன் அத் தாபனம் தயாரித்த உடன்படிக்கை உறுதியின் நகல் பிரதியின் பிரதி ஒன்று பிரதேச செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- பிரதேச செயலாளர் உங்களுக்கு அங்கீகரித்த கடன் உடன்படிக்கை கடன் உறுதியின் நகல் பிரதியுடன் அங்கீகாரக் கடிதத்தினை வழங்குவார்.
- அக் கடிதத்தினையும், அங்கீகரித்த கடன் உடன்படிக்கையின் உறுதி ஒன்றினையும் கடன் வழங்கும் தாபனத்திற்கு முன்வைக்க வேண்டும்.
Q20. உறுதியினை பிணையாக வைத்து கடன்பெறக் கூடிய தாபனங்கள் எவை ?
மக்கள் வங்கி அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி இலங்கை வங்கி லங்கா அபிவிருத்தி நிதி வங்கி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத் தாபனம் கூட்டுறவுச் சங்கங்கள், கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்கள் காணி ஆணையாளர் திணைக்களத்தினால் ங்கீகரிக்கப்பட்டுள்ள பிற தாபனங்கள்
- 1988 இன் 30 ஆம் இலக்க வர்த்தக வங்கிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தாபனங்கள்.
- 1963 இன் 11 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தாபனங்கள்.
- 1979 இன் 27 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தாபனங்கள்.
- 1988 இன் 78 ஆம் இலக்க திருத்த நிதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தாபனங்கள்.
Q21. பிள்ளை ஒருவரின் கடன் நிதியிற்குப் பிணையாக உறுதியினை வைக்க முடியுமா ?
ஆம், நீங்கள் கடன் நிதியின் பிணையாளி ஆகுவீர்கள்
By : Western Provincial Land Department