“இன்டர் நெட் சொஷைட்டி” என அழைக்கப்படும் இணைய சமூகம் எனும் அமைப்பானது, உலகத்திலுள்ள அனைவரும் மிக நம்பகரமான மற்றும் விளைதிறனான இணைய சேவையை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலும் உலகின் எல்லா நாடுகளிலும் கிளைகளை ஸ்தாபித்து இயங்கி வரும் அமைப்பாகும். இதனடிப்படையில் “இன்டர் நெட் சொஷைட்டி” இன் இலங்கைப்பிரிவானது இலங்கையர்களுக்கு சிறந்த இணைய சேவை வழங்கப்படுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன் இவ்வருடம் கல்வி மட்டும் சுகாதாரம் என்பவற்றின் பால் கூடிய கவனம் செலுத்துகிறது.
எனவே இணையம் ஊடாக இலங்கையர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் படி, பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
- வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றினால் பாடசாலை மாணவர்களுக்கு என தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை கல்வி வளங்களை அடையாளப் படுத்துதல்.
- அடையாளங் காணப்பட்ட வளங்களை கீழ்வரும் வகைகளில் பிரித்தல்.
- இலங்கை கல்வித்திட்டத்திற்கமைய ஒவ்வொரு தரம்/வகுப்புக்கும் பொருத்தமானவை என்றவாறாக
- வித்தியாசமான கருப்பொருட்களின் அடிப்படையில்
- எதிர்பார்க்கப்படும் கற்றல் அடைவுகளின் அடிப்படையில்
இதற்கென பொருத்தமான கல்வி வளங்களை அடையாளம் காண்பதற்காக, உங்களது பங்களிப்புக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
இதே வேளை, உங்களால் அடையாளங்காணப்பட்ட நிகழ்நிலை கல்வி வளங்களை இயைபான தரம்/வகுப்பு, கருப்பொருள், எதிர்பார்க்கப்படும் கற்றல் அடைவு என்பனவற்றின் அடிப்படையில் பிரித்து வழங்குவதற்கு முடியுமாயின் அது பேருதவியானதாக அமையும். இருப்பினும் இது அவசியமானதொன்றல்ல. இலங்கையின் கல்வித்திட்டத்தினுள் உள்ளடங்காததாயினும் மாணவர்களுக்கு அவசியமானதென நீங்கள் கருதும் அனைத்து வகையான கல்வி வளங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நாம் இலவசமானவை மற்றும் கட்டணத்திற்குரியவை ஆகிய அனைத்து வகையான கல்வி வளங்களையும் அடையாளப்படுத்த எதிர்பார்ப்பதால் நீங்கள் இவை இரண்டின் மீதும் உங்களது கவனத்தைச் செலுத்த முடியும்.
நீங்கள் அடையாளம் கண்டுள்ள வளங்களை எம்முடன் பகிர்ந்து கொள்வதற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் விண்ணப்பத்தை (Google Form) பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நீங்கள் வழங்கும் உள்ளடக்கமானது கிரியட்டிவ் கொமென்ஸ் உரிமத்துடனான வலைத்தளத்தினால் பராமரிக்கப்படும்.
இதன் பொருட்டு கல்வி அமைச்சு, பரீட்சைத்திணைக்களம், கல்வி வெளியீட்டுத்தணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம்.
https://forms.gle/R7WXmm2Ca4A4bfMx6
අන්තර්ජාල සංගමය යන ලෝකයේ සෑම පුද්ගලයෙකුටම වඩාත් විශ්වසනීය හා ඵලදායී අන්තර්ජාල සේවාවක් ලබා දීම අරමුණු කොට ගත් සංවිධානයක් වන අතර එහි ශාඛා ලෝකයේ සෑම රටකම පාහේ ස්ථාපිත කර ඇත. අන්තර්ජාල සංගමයේ ශ්රී ලංකා ශාඛාව, ශ්රී ලංකාවාසීන්ට වඩාත් හොඳ අන්තර්ජාල සේවාවක් ලබා දීම සඳහා කැප වී කටයුතු කරන අතර මෙම වර්ෂයේ දී අධ්යාපනය සහ සෞඛ්ය යන අංශ සඳහා ප්රමුඛතාවක් ලබා දී කටයුතු කරයි.
අන්තර්ජාලය මගින් ශ්රී ලාංකිකයින්ගේ අධ්යාපනය වැඩිදියුණු කිරීම සඳහා වැඩසටහනක් ආරම්භ කිරීමට අදහස් කර ඇත. එම වැඩසටහන යටතේ,
මෙහි දී අපි පහත සඳහන් කාර්යන් ඉටු කිරීමට බලාපොරොත්තු වෙමු.
- විදේශීය පර්යේෂණායතන, විශ්වවිද්යාල හා අනිකුත් ආයතන මගින් පාසල් ශිෂ්යයන් අරමුණු කර ගෙන සම්පාදනය කර ඇති අධ්යාපනයට සම්බන්ධ සම්පත් හඳුනා ගැනීම.
- මෙම හඳුනා ගත් සම්පත් පහත සඳහන් ආකාරයට පෙළ ගැස්වීම
- ශ්රී ලංකාවේ විෂය නිර්දේශයට අනුකූලව එක් එක් ශ්රේණි සඳහා ගැලපෙන පරිදි
- විවිධ තේමා යටතේ
- අපේක්ෂිත ඉගෙනුම් ප්රතිඵල අනුව
මේ සඳහා සුදුසු අධ්යාපනික සම්පත් හඳුනා ගැනීමට අප ඔබගේ දායකත්වය උදෙක්ම බලාපොරොත්තු වෙමු .
ඔබ හදුනාගෙන ඇති එම අධ්යාපන සම්පත් අදාළ වන ශ්රේණිය , අදාළ වන විෂය, තේමාව සහ බලාපොරොත්තු වන අධ්යාපන අරමුණු ආදියට වර්ග කර හඳුනා ගැනීම අපේ කාර්යය ඉටු කර ගැනීමට පිටුවහලක් වනු ඇත. ශ්රී ලංකාවේ විෂය නිර්දේශයට අඩංගු නොවුනත් ශිෂ්යයන්ට වැදගත් වේ යැයි ඔබ සලකන සියලුම අධ්යාපනික සම්පත් පිළිබඳ විස්තර අප වෙත ලබා දෙන ලෙස අපි උදක්ම ඉල්ලා සිටිමු.
මේ සඳහා අන්තර්ජාලය තුළ ඇති නොමිලේ ලබා ගත හැකි අධ්යාපන සම්පත් මෙන්ම කිසියම් මුදලක් ලබා දිය යුතු අධ්යාපන සම්පත් සඳහා ද අවධානය යොමු කළ හැකි ය.
ඔබ හඳුනා ගත් අධ්යාපන සම්පත් අප වෙත ලබා දීම සඳහා මේ සමග ඇති ගූග්ල් ආකෘති පත්රය භාවිත කළ හැක.
ඔබ විසින් ලබා දෙන අධ්යාපන සම්පත් creative commons බලපත්රය සහිත වෙබ් අඩවියක් තුළ පවත්වා ගෙන යාමට අදහස් කර ඇත.
මේ සඳහා අධ්යාපන අමාත්යාංශය, විභාග දෙපාර්තමේන්තුව, අධ්යාපන ග්රන්ථ ප්රකාශන දෙපාර්තමේන්තුව හා ජාතික අධ්යාපන ආයතනයේ සහය ලබා ගැනීමට අපේක්ෂා කරමු.
https://forms.gle/M6sdRwKEZVWsDBtS9
The Internet Society is an organization that aims to provide the most reliable and effective Internet service to every person in the world and has established branches in almost every country in the world. The Sri Lanka Chapter of the Internet Society is committed to provide a high quality and effective Internet service to the Sri Lankans, by focusing on education and health this year.
According, the Society has planned to launch a program to improve the education of Sri Lankans through the Internet with the intention of performing following functions;
- Identify online educational resources prepared for school students by foreign research institutes, schools, universities and other institutions.
- Align these identified resources as follows
- As per the syllabus of Sri Lanka to suit each grade
- Under different themes
- According to the expected learning outcomes
We look forward to your contribution in identifying suitable educational resources for this.
If the online educational resources you have identified could be categorized under the relevant grades, subjects, themes and desired learning objectives, it would be of great assistance for us to accomplish the task. However, it is optional.
We urge you to provide us with details of all the educational resources that you consider important to students, even if they are not included in the school curriculum of Sri Lanka.
We are looking for free educational resources as well as paid resources, so you can focus on them both.
You can use the Google form attached to this to provide us information about the educational resources that you have identified.
A website under a creative commons license will be maintained with the content you provided.
We hope to get the assistance of the Ministry of Education, the Department of Examinations, the Department of Educational Publications, and the National Institute of Education for this purpose.
https://forms.gle/F7LDxc6B95rkHsdv5