01- சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் ஒன்று தான் கர்ப்பமாக இருக்கும் காலம் இந்த காலத்தில் கொரோனா பயத்தால் வீணாக்காமல் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் கொரோனா கொரோனா என்று பயந்தாள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகையால் சந்தோஷமான விஷயங்களை யோசியுங்கள். நல்ல அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாசியுங்கள். தேவையற்ற வீண் பேச்சுக்கள் பேசாமல் நல்லதையே பேசுங்கள்.

02- எங்கள் மண்ணில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களையே சாப்பிடுங்கள். எந்த நேரத்திலும் சரி இறக்குமதி செய்யப்படும் மரக்கறி பொருட்களை தவிர்ப்பது நல்லது.

03- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சாப்பாடுகளை சாப்பிடுங்கள். (கீரைகள், வெண்டைக்காய், புடலங்காய், கொதிக்க வைத்த துளசி தண்ணீர், பழங்கள், நட்ஸ் வகைகள்)

04- பொதுவாக எல்லோரும் இந்த சந்தர்ப்பத்தில் (வெப்பநிலை) தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு நீர்ச்சத்து குறையவே இருக்கக் கூடாது ஆகையால் அதிகமாக தண்ணீர் குடியுங்கள்.

05- இந்த நேரத்தில் சடங்கு சம்பிரதாயங்கள், பக்கத்து வீடு, கல்யாண வீடு, என எல்லா இடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருங்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

06- ரெகுலர் செக்கப்புக்கு வைத்தியசாலைக்கு செல்பவர்கள் வைத்தியரிடம் கேட்டு உறுதி செய்த பின்னரே வைத்தியசாலைக்கு செல்லுங்கள். திரும்பி வந்தவுடன் நன்றாக குளித்து கொள்ளுங்கள்.

07- இந்த தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருக்க வேண்டும். விட்டமின் மாத்திரைகள் போட விரும்புபவர்கள் வைத்தியரின் ஆலோசனையை நாடவும்.

Leave a Reply