கொரோனா வைரஸ் காரணமாக மே மாதம் 28ம் திகதி வரை இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதேபோல் இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்கள் நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைத்துள்ளது.
மேலும் அயர்லாந்து – வங்கதேசம் அணிகள் இடையே மே மாதம் நடக்க இருந்த 3 ஒருநாள் போட்டிகளும் இன்னும் நான்கு t20 போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.