சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு.

அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை அடிக்கடி சாப்பிடுவது தானே நம் பழக்கம். அந்த வகையில், வடஇந்தியர்களின் உணவுகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் கடலை மாவு குழம்பு பற்றி தான் நாம் இப்போது தெரிந்து கொள்கிறோம். இந்த குழம்பில் ஏகப்பட்ட சத்துக்கள் மறைந்துள்ளனவாம். மேலும், இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். அதனால் தான் வடஇந்தியர்கள் இதனை அடிக்கடி சமைத்து சாப்பிடுகின்றனர்.

பேசின் கி கதி என வடஇந்தியர்களால் அழைக்கப்படும் கடலை மாவு குழம்பில் சேர்க்கப்படும் பொருட்களில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த குழம்பு உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரிதும் உதவக்கூடியது. ஒரு வேளை நீங்கள் இந்த குழம்பை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தால், அதிலுள்ள சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்…

உடல் எடை குறைக்க உதவும்

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், எதை சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறை யோசித்து விட்டு தான் சாப்பிட வேண்டும். அப்படி ஒரு வேளை, உடல் எடை குறைக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கியிருந்தால், இந்த கடலை மாவு குழம்பை தயாரித்து சாப்பிடலாம். இந்த குழம்பின் முக்கிய பொருளே கடலை மாவு தான். கோதுமை மாவை விட கடலை மாவில் சிறந்த கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. அதுமட்டுமல்லாது, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஃபோலேட் மற்றும் குறைந்த கிளைசீமிக் குறியீடு ஆகியவையும் உள்ளன. இதன் காரணமாக இது எடையைக் குறைக்க உதவக்கூடியது. மேலும், இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாது இதயத்திற்கும் வலு சேர்க்கும்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரைக்கு ஏற்றது

கடலை மாவு குழம்பு, மெக்னீசியம் மற்றும் குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். மெக்னீசியம் உங்கள் தசைகளை தளர்த்தி இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். அதே நேரத்தில், அதில் உள்ள பாஸ்பரஸ் லிப்பிட் வழிமுறையை சீராக்க உதவுகிறது. இது தவிர, குறைந்த கிளைசீமிக் குறியீடானது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது

கடலை மாவு குழம்பு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு முழுமையான உணவாக அமையுமாம். ஏனெனில் இதில் ஃபோலேட், வைட்டமின் பி 6 மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இதன் காரணமாக இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, பெண்ணின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி மூலம் கருச்சிதைவு அல்லது பிற பிரசவ பிரச்சனைகள் ஏற்படாமல் குறைக்க உதவுகிறது.

By Admin

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.