இந்தியாவில் ஆரம்பத்தில் பரவிவந்த கொரோனா வைரஸ் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அதேவேளை கொரோனா பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சு இன்று கொரோனா வைரஸ் விவரத்தை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 12584 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 179 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் இருந்து 1 கோடியே 1 லட்சத்து 11 ஆயிரத்து 294 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

Leave a Reply