உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்பதில் கறுத்து வேறுபாடு இருந்தது. இதனால் போட்டி பற்றிய சந்தேகம் எழுந்தது. இந்நிலையில்தான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனையில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இன்னும் 4 மாதங்கள் இருக்கும் பட்சத்தில் போட்டியை ரத்து செய்வது குறித்து தற்போது முடிவு எடுக்க தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் 32வது ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை மாதம் 24ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி வரை நடைபெறும்.
இந்தப் போட்டி தவறும் பட்சத்தில் ஜப்பானுக்கு 97ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்தப் போட்டியை ஜப்பான் நடத்துவதற்கு முக்கியமான காரணம் 56 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சந்தர்ப்பம் என்பதனால் ஜப்பான் அரசாங்கம் இந்தப் போட்டி நடத்துவதற்கு எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.