KVC | Kuchchaveli

குச்சவெளியின் உத்தியோக ஊடகமாக பதிவுசெய்யப்பட்ட கேவீ சீ கடந்த 5 வருடங்களாக எமது குச்சவெளி கிராமத்தில் செயட்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.

எமது கிராமத்தின் கல்வி, பொருளாதாரம், அரசியல் உட்பட சகல துறைகளிலும் சிறந்த முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்தும் முயட்சிகளை வரலாற்றுப் பதிவுகளாக உலகுக்கு தெரியப்படுத்தும் முக்கிய தூரநோக்கு சிந்தனையே கேவீசீ யான எமது இலக்கு என்பதனை சந்தோசமாக கூறிக்கொள்கிறோம்.

நமது கிராம வளர்ச்சியில் நீங்கள் காட்டும் அக்கறை, முயட்சி மற்றும் முன்னெடுப்புகளை எமது இணையத்தில் இடம்பெறச்செய்ய தவறாது எமது ஊடகவியலாளர்களை அணுகுமாறு வேண்டுகிறோம்.

நீங்கள் எழுத்தாளர்களாகவோ புகைப்பட கலைஞ்சர்களாகவோ அல்லது வேறு துறைகளில் தேர்ச்சிபெற்றவராகவோ இருந்தால் உங்களின் படைப்புகளை கேவீசீ யில் பதிவேற்றம் செய்யுங்கள், நமது மரணத்தின் பின்னர் கூட நமது படைப்புகள் நாளைய தலைமுறைக்கு வழிகாட்டட்டும்.

நமது கிராம முக்கியஸ்தர்களின் வாழ்க்கை குறிப்பு மற்றும் சாதனைகள் உட்பட ஏனைய முக்கிய அம்சங்களை வரலாற்றுப் பதிவாக வாழ்க்கை சரிதை வடிவில் எமது இணையத்தில் பதிவிட உத்தேசித்துள்ளோம். உங்கள் சுயசரிதை, உங்கள் சாதனை, உங்கள் படைப்பு இன்னும் இது போன்ற சகல விடயங்களையும் நீங்களே பதிவேற்றம் செய்ய இது ஒரு சந்தர்ப்பம் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம்.

இறுதியாக, நமது கிராம நிகழ்வுகளை ஊடகத்தில் தெரியப்படுத்த எமது Admin குழுவை அணுகுமாறு பணிவாக வேண்டிக்கொள்கிறோம்.

இப்படிக்கு

Admin | KVC Kuchchaveli Media | Email : admin@kuchchaveli.com

By Admin

Leave a Reply