20 ஓவர் கொண்ட 08 அணிகள் இடையிலான 13வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மும்பையில் 29ம் திகதி நடைபெற இருந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் திகதி வரை தள்ளி வைக்கப்பட்டது.
ஐ.பி.எல். போட்டி விஷயத்தில் அடுத்து என்ன செய்வது குறித்து ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் நேற்று பேச்சு வார்த்தை டெலிகான்பரன்ஸ் நடைபெற இருந்தது ஆனாலும் இந்த தொலைத்தொடர்பு மூலம் பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.