ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக (Social Media) சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இஸலாம் மற்றும் அந்த சமூத்தினர் குறித்து அவதூறாக எழுதுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்திய தூதரம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் இந்தியர்கள் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்து நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர்.

துபாயில் Dubai ஒரு உணவகத்தில் சமையல்காரராக இருக்கும் ராவத் ரோஹித், ஒரு நிறுவனத்தில் காசாளராக பணிபுரியும் இந்தியர் ஒருவரும் இஸ்லாம் குறித்து அவதூறாக எழுதியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக gulf news கல்ப் நியூஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

துபாயில் (UAE) இத்தாலியன் உணவகம் (Italian Resturant) நடத்திவரும் அஜாதியா குழுமத்தின் செய்தித்தொடர்பாளர், சமையல்காரரும்இந்தியருமான ரோஹித்தை வேலையிலிருந்து நீக்கியதை உறுதி செய்துள்ளார்

ஷார்ஜாவை (Sharjah) தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நுமிக்ஸ் ஆட்டோமேஷன் நிறுவனம் தன்னிடம் காசாளராக வேலைபார்க்கும் இந்தியரையும் வேலயிலிருந்து நீக்கியதை உறுதி செய்துள்ளது. அவரின் ஊதியத்தையும் நிறுத்திவைத்து, வேலைக்கு வரத்தேவையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை முடியும் வரை ஊதியம் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரகம் இஸ்லாம் குறித்து அவதூறான கருத்துக்களை, சர்ச்சைக்குரிய வாசகங்களை பதிவிட வேண்டாம் என கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எச்சரித்தும் இவர்கள் தொடர்ந்த அந்த செயலைச் செய்துள்ளனர் என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Admin

Leave a Reply