வெட்ட வெளியில் வேட்டையாடிய
வேடுவர் காலம்
ஏறுகளை விரட்டி
வீறு நடை பயின்ற
ஏறு மனிதா!
கால வெள்ளம்
அடித்துச் சென்ற
சாலையோரத்துச் சகதிகள்
ஆழ்கடலில்
தள்ளாடுகின்றன
தூய்மைக்காக……
விண்ணைத் தொட்ட
மனிதம் இப்போ
பூமியில் அல்லாட
கண்ணைக்கட்டி
காட்டில் விட்டதாய்>
ஏறு தழுவியவன்
ஏங்கும் நிலை……
நான்கு இஞ்சிப் பெட்டி
நம் உள்ளங்கைச் சிறையில்
ஆயுள் கைதியாய்
அகப்பட்டு
கோழைக்குள் நீ
கோமாளியானாய்!
காளை அடக்கி
கோழையை விரட்டியவன்
சாலையில் உலாவும்
வைரஸ் பரவலை
விரட்டியடிக்க
வேதாந்தம் பேசுகிறாய்.
மனிதா!
ஏறு பேல் நட!
வீறு கொண்டு எழு!
மாசு கொண்ட சூழல்
வீசு தென்றலில்
மணம் பரப்பு
வீதியோர மாசுக்களை
வீணே விடாதே!
வில்லங்கம் ஆயிடும்
அதனால்,
வீறு கொண்டு எழு!
ஏறு போல…..
பட்டி தொட்டியெல்லாம்
மத வெறி பிடித்த
மாக்களை
மனசுக்கும் எடுக்காதே!
மண் மாறி விடும்.
ஆங்காங்கே கூவித் திரியும்
வெறித்தனக் கோ~ங்களை
விரட்டியடிக்க
ஏறு போல் வீறு கொண்டெழு!
தக்கிட ….தக்கிட….தக்கிடத்…தோம்……