KVC NewsKuchchaveli KVC News

எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிலர் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டு வரவதாகவும், தற்பொழுது சில எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவதாகவும் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இருப்பினும் நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. பெருந்தொகை எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருப்பதாகவும் மின் சக்தி எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY : Lanka Government News

By Admin

Leave a Reply