நாட்டின் நெறுக்கடியான சூழ்நிலையில் நாம் எவ்வாறு?? நடந்து கொள்ள வேண்டும் Covid19 என்கின்ற இந்த ஆபத்தான உயிர்க்கொள்ளியை நாம் எவ்வாறு வெற்றிகொள்வது என்பது பற்றி பல ஊடகங்கள் அடிக்கடி ஞாபகமூட்டினாலும் நம் காதுகலுக்கென்னவோ விழுவதும் இல்லை அதனைப்பற்றி பொருட்படுத்துவதும் இல்லை. இதன் காரணமாகவே இன்று பேசு பொருளாக ஆகி இருக்க கூடிய இந்த கொரோனா தொற்றானது நாள் தோறும் அதிகரித்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
உலகின் பல பாகங்களை உழுக்கிய இந்த வைரசானது நம் நாட்டில் பல மாவட்டங்களில் வேகமாக பரவி வருகின்ற இந்த சூழ்நிலையில் நமக்காக அரசு, வைத்தியர்கள், தாதிமார்கள், பாதுகாப்பு படையினர் இவ்வாறு பல தரப்பினரும் தீயாக மனப்பாங்குடன் செயற்பட்டு வருவதை எம்மால் காண முடிகின்றது ஆனால் நாம் இந்த நாட்டின் பொருப்புள்ள குடிமகனாக நம்குடும்பத்தின் பொருப்புள்ள குடும்ப தலைவனாக இருக்கின்றோமா? எனும் கேள்விக்கு உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் இருங்கள், வீட்டில் இருங்கள் எனும் கூற்று நாள் தோறும் நம் செவிகளில் விழுந்தாலும் நாம் அதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அரசு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக விவசாயம், கடற்றொழில், அத்தியவசிய பொருட்கள் விநியோகத்திற்க்கு அனுமதி வழங்கி இருக்கின்றது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொன்டு ஒரு மாவட்டங்களில் இருந்து மற்றுமொரு மாவட்டத்திற்க்கு வியாபார நிமித்தம் மக்கள் அதிகம் ஒன்று சேரும் சந்தைக்கு செல்கின்றனர். இதனால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மீண்டும் தமது ஊருக்கு திரும்பி வந்து குடும்பத்தோடு இருக்கின்றார் பல இடங்களுக்கு செல்கின்றார் இந்நிலையில் ஊரடங்கு சட்டத்திற்க்கு கட்டுப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் ஒருவர் வெளி மாவட்டத்திற்க்கு சென்று நோய்த்தொற்றுடன் வந்த நபரின் ஊடாக பாதிக்க படுகின்றார். இதற்க்கு யார் பதில் கூறுவது?
10 பேர் வியாபாரம் செய்ய ஒட்டுமொத்த கிராமமும் மூடப்படும் (லொக் டவுன்) நிலை உறுவாகலாமா? எனவே அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரதேச செயலகப்பிரிவு இதனை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்க்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது இவ்வாறான கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்தாலே நாம் Covid-19 உடனான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.