நாட்டின் சுற்றுளாத்துரை பெரிதும் வீழ்ச்சி கண்டிருப்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும் திருகோணமலை அலஸ் தோட்டம் உணவக உரிமையாளர் தனது பாரிய வியாபார வீழ்ச்சியை இவ்வாறு எம்மோடு பகிர்ந்து கொன்டார்.

நான் சிங்களம் ஆனாலும் தமிழ் நன்றாக பேசுவேன் திருகோணமலைக்கு வந்த பின்புதான் தமிழை கற்றுக்கொன்டேன் என்று கூறிவிட்டு (புன்னகையோடு) தம்பி நான் பேங்க் லோன் எடுத்துத்தான் இந்த ரெஸ்டூரன்டை ஆரம்பித்தேன் ஆரம்பித்து இன்றோடு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் 1வருடம் தான் என்னால் வங்கி கடனை கட்ட முடிந்தது அதன் பிறகு அந்த பாழ போன பாதகன் குண்டுவெடிப்புக்கு பிறகு எனது வியாபாரம் அப்படியே முடங்கி விட்டது லோன் கட்ட முடியாது மன உளைச்சலுக்கு உள்ளானேன்…ஆனால் நான் என் நம்பிக்கையை கை விடாது மேற்க்கொன்டு கடனை தெரிந்தவர்களிடம் வாங்கி இந்த வருடம் போன வருட நஷ்டத்தை ஈடு செய்து விடலாமென ஆவலோடு காத்திருந்தேன் ஆனால் எனது கெட்ட நேரம் இந்த “கொரோனா” வந்து விட்டது என்ன செய்ய எல்லாம் தலைவிதி என்று சலைத்துக்கொன்டார்.

உண்மையில் இவ்வருடம் அனைத்து வியாபாரிகளுக்கும் பாரிய பின்னடைவை தோற்றுவித்திருக்கிறது பலசரக்கு,அத்தியவசிய உணவுப்பொருட்களை தவிர என்று நாம் அவருக்கு ஆறுதலாக கூற அது சரிதான் ஆனால் நாங்கள் 2வருடம் நஷ்டமடைந்து விட்டோம் இதனை ஈடு செய்ய இன்னும் 10வருடங்கள் போகலாம் என்று ஏக்கத்துடன் பெறுமூச்சு விடுகிறறார் 45வயது மதிக்கத்தக்க அந்த முதலாளி!!!

Leave a Reply