கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 06:00 மணிமுதல் பிற்பகல் 02:00 வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் 02:00 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.