உலகம் முழுவதும் இன்று இரவு வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நவீன உலகில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் பொக்கிஷமாக திகழ்ந்து வருவது வாட்ஸ்-அப் WHATSAPP ஆகும்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் சேவை ஒரு மணி நேரத்த்திற்கும் மேலாக திடீரென முடங்கியதால் அதனை பயன்படுத்தி வருபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் வாட்ஸ்-அப் பயனர்கள் அவதி அடைந்தனர். இது தொடர்பாக பலர் டுவிட்டர் பக்கங்களில் வாட்ஸ்-அப் சேவை முடங்கிய தகவல்களை பகிர்ந்தனர். .இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் பல்வேறு நாடுகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக திடீரென முடங்கியது.