கொழும்பு, தும்முல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிதும் யோமால் பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 9 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அவருடைய இந்த செயற்பாடனது பொலிஸாரிற்கு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 2020.06.14 ஆம் திகதி முதல் பொலிஸ் கான்ஸ்டபிளான சிதும் யோமல் பதில் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Leave a Reply