🔴இம்முறை பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை (ONLINE) முறைமையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். அதன் அச்செடுத்த பிரதியொன்றை
தபால் மூலம் அனுப்பி வைப்பது கட்டாயமானது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளன.

🔴பாடசாலையில் இருந்து பாடசாலை விடுகைப் பத்திரத்தைப் பெற்றவர்கள் மட்டுமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக
தோற்ற முடியும். பாடசாலையில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாகத் தடை
செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தோற்றினார் என அறியப்படுமிடத்து பரீட்சைப் பெறுபேற்றை இரத்து செய்து எதிர்வரும்
காலங்களில் பரீட்சைகளுக்குத் தோற்றத் தடை விதிக்கப்படும்.

🔴ஒரு விண்ணப்பதாரி ஒரு விண்ணப்பப்படிவத்தை மாத்திரமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்குமேற்பட்ட
விண்ணப்பப்படிவங்கள் அனுப்பினால் சகல விண்ணப்பப்படிவங்களும் இரத்துச் செய்யப்படும் என்பதுடன்
அப்பரீட்சார்த்தி தொடர்பாக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். பரீட்சைப் பெறுபேறுகளை வழங்கிய
பின்னராயினும் இப்படியான முறைகேடான செயல் தெரியவரின் பெறுபேற்றை இரத்துச் செய்து உரிய சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும்.

🔴தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது நிரந்தர வதிவிட முகவரியை குறிப்பிட வேண்டுமென்பதுடன் தாம் கல்விகற்ற
தனியார், சர்வதேச பாடசாலைகளின் பெயர், முகவரியை உள்ளடக்கலாகாது. அவர்கள் தமது தனிப்பட்ட தொலைபேசி
இலக்கத்தையும் உள்ளடக்கல் வேண்டும்

♦முழுமையான விபரங்களுக்கு -* http://bit.ly/2tVroIu

♦விண்ணப்ப முடிவுத் திகதி – 02.03.2020

Leave a Reply