நாட்டில் இடம் பெற்றிருக்குகம் Covid 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயல்த்திட்டத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரையிலான ஊரடங்குச்சட்டம் நாடலாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டதையடுத்து அன்றாடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர் வர்க்கத்தினர் நாடலாவிய ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்றமை நாம் அறிந்த உண்மை..இது தொடர்பாக சில அரசியல் தலைமைகள் பத்திரிகை,ஊடகங்களில் அறிக்கையிட்டாலும் செயல் வடிவில் செய்து காட்டியுள்ளார்கள் குச்சவெளி இளைஞர்கள். திருகோண மலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தில் வசிக்கும் தி/அந்நூரியா மு.ம.வி. பழைய மாணவர்களே(2013 O/l batch) தமது சொந்த நிதியில் இருந்து இந்த உணவுப்பொதிகளை வழங்கியுள்ளனர். இவர்களைப்போன்று வசதி படைத்தவர்கள் முன் வந்து வறுமையில் வாடும் நம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிடுவீர்!!எல்லாம் வல்ல இறைவன் நமது நல்லமழ்களை பொருந்திக்கொள்வானாக.

Leave a Reply