🔴 திகன – கும்புக்கந்துறை விக்டோரியா
நீர்த்தேக்கத்தில் இன்றைய தினம் நீராட
சென்ற இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி
உயிரிழந்த நிலையில் சடலங்களை மீட்கச்
சென்ற ஒருவரும் நீரில் மூழ்கி உயிரழப்பு!

இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜிஊன்

திகன கும்புக்கந்துறை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்றைய தினம் நீராட சென்ற இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் குறித்த தம்பதியினரை தேடும்பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை குறித்த சகோதரியின் ஜனாஸா எடுக்கப்பட்டது.

தொடர்ந்து சகோதரியின் கனவரின்
உடவை தேடும்பணி இடம்பெற்றுக்கொண்டு இருக்கையில் அப்பணியில் இருந்த மற்றுமத சகோதரர் ஒருவரும் நீருக்கு அடியில் சென்றவர் மீண்டும் வருகை தரவில்லை, அவரை தேடும் பணியும் தொடர்ந்து இடம்பெற்றது.
சிறிது நேரத்தின் பின் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இறுதியாக மாலை 5.00 மணியளவில்
குறித்த சகோதரரின் உடலும்  மீட்கப்பட்டு
பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய
வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லப்பட்டதுடன் சம்பவம் குறித்து
தெல்தெனிய பொலீசார் மேலதிக
விசாரனைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By JF

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.