இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப் படுத்தும் நோக்கில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல வறுமைக் கோட்டின் கீழ் குடும்பங்கள் அசௌகரியங்களை மேற்கொண்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் சமூர்த்தி பயனாளிகளுக்கு 5,000ரூபாய் நிதியினை வழங்கியது.
மேலும் பயன்களை பெற்று வரும் மற்றும் காத்திருக்கும் பட்டியலில் உள்ள முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள், விசேட தேவையுடையவர்களுக்காக ரூ. 5,000 கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது.
மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் கிராம குழுவின் மூலம் கடைபிடிக்கப்பட்டுள்ள முதியவர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக இந்த ரூ. 5,000 கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.