வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பான புதிய தொழில் சார்ந்த பாடநெறிக்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக தெளிவூட்டுவதற்காக நேற்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

புதிய தொழில் சந்தைக்கு பொருத்தமானவர்களா என்பது எமது நாட்டு பட்டதாரிகளுக்கு வரும் குற்றச்சாட்டாகும். இதன்படி திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வியாபாரத் துறையுடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகள் மற்றும் வியாபாரத் துறையை தொடர்புபடுத்தி இந்த புதிய பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாத, மற்றும் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் நுழைவு பரீட்சைக்கு முகம் கொடுப்பதன் மூலம் இந்தப் பாடநெறியை தொடர சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தூர பிரதேச மாணவர்கள் தமிது பிரதேசங்களை விட்டு கொழும்புக்கு வருகைதர வேண்டியதில்லை. தொழில் செய்பவர்கள் கூட இந்தப் பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியும் என்பதாகவும், மாணவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதாரண பாடநெறி கட்டணமொன்று அறவிடப்படும் என்றும் தலைவர் தெளிவு படுத்தினார்.

கடந்த வருடம் மூன்று லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன், அவர்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இதில் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். ஏணைய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான தேவை இருந்தபோதிலும் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. எனவே இந்தப் புதிய பட்டபடிப்பானது இதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். (Government news)

By Admin

Leave a Reply

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.