இலங்கையில் பலதரப்பட்ட தன்னார்வமுள்ள மக்கள் பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உள் நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி ஸில்வா நேற்று அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களிடம் 25 மில்லியன் ரூபாய்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலகப்பெரும , மேலும் டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, மேலும் T-20 போட்டியின் தலைவர் லஸித் மலிங்கா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply