இலங்கை 1972ம் ஆண்டுக்கு முன்னர் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரில் அறியப்பட்டது.
இலங்கையின் முழுப்பெயர்: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு. இங்கு 20மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இலங்கையின் தலைநகரம்: கொழும்பு.
இலங்கையில் ஆட்சி மொழிகள்: சிங்களம், தமிழ். (ஆங்கிலம் அரசினால் அங்கீகரிக்கப்பட்டது)
இலங்கை குடியரசு, மற்றும் ஒற்றையாட்சி அரசினால் ஆளப்படும் நாடாகும்.
இலங்கையின் சமயங்கள்: சிங்களவர்கள், இலங்கை தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள், பறங்கியர்கள், இலங்கை மலாயர்கள், இலங்கை ஆப்பிரிக்கர்கள், மேலும் பூர்விகக் குடிகளான வேடுவர்கள் ஆகியோரின் தாயகமாகும்.
இலங்கையின் புனைப்பெயர்கள்: “இந்து சமுத்திரத்தின் முத்து.” “புன்னகைக்கும் மக்களின் தேசம்.”
இலங்கையின் ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகள்: தேயிலை, கோப்பி, கருவா, தெங்கு, இரத்தினம், இறப்பர் போன்றவைகள் ஆகும்.
இலங்கையில் பிரதான நகரங்கள்: அனுராதபுரம், கண்டி, நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், குருநாகல், காலி.
இலங்கை வெப்பமண்டலக் காடுகளையும் உயர் உயிரியற் பல்வகைமையைக் கொண்ட பல்வேறுவகையான இயற்கை அமைப்பினைக் கொண்டது.