இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை மேற்கொள்ளுமாறு தொலைத்தொடர்புகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இத்திட்டத்தினை நாளை முதல் நடைமுறைப்படுத்துவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் பணிப்பாளர் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.