தற்போது நிகழும் கொரோனா வைரஸ் (COVID-19) பரவல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 11 சர்வதேச விமான நிறுவனங்கள் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Qatar Airways (கட்டார் விமான சேவை), எமிரேட்ஸ் – துருக்கி விமான சேவை, குவைட் விமான சேவை, உக்ரைன் விமான நிறுவனம், ஓமான் விமான நிறுவனம் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று பரவலுக்கு முன்னர் 2019 – 2020 காலப்பகுதியில் சுமார் 35 விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை மேற்கொண்டிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.